ஆரணியில் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கும்மிடிப்பூண்டிக்கு கி.வேணு வழங்கினார்

" alt="" aria-hidden="true" />

கும்மிடிப்பூண்டி,ஏப்14 -

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் மத்திய,மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில்,அன்றாடக் கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத அவல நிலையில் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.எனவே, அவர்களுக்கு உதவி செய்யும்  வண்ணம் நாடு முழுவதும் 

 பல்வேறு இடங்களில்,பல்வேறு அமைப்புகள் மனிதாபிமான அடிப்படையில் தங்களால் இயன்ற உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள்,விதவை தாய்மார்கள் பேரூராட்சியில் பணியாற்றும் 58தூய்மை 

பணியாளர்கள் உள்ளிட்ட 200 குடும்பங்களுக்கு திமுகவை சேர்ந்த ஆரணி எஸ். ரோஸ்பொன்னையன் தனது செலவில் தலா 5 கிலோ அரிசி,ஒரு கிலோ பருப்பு, எண்ணெய்,காய்கறிகள் மற்றும் முககவசம்,சானிடோரியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஆரணி நகர திமுக செயலாளர் ஜி.பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத்தலைவர் பகலவன், மாவட்ட துணைச் செயலாளர் கோளூர் கதிரவன்,மீஞ்சூர் ஒன்றிய கழகச் செயலாளர் வல்லூர் ரமேஷ்,

வக்கீல்கள் அன்புவாணன், ரமேஷ்,கோபிநாத்,முன்னால் நகரக் கழகச் செயலாளர்கள் முத்து,கண்ணதாசன்,முன்னாள் கவுன்சிலர் கு.கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்,ஜெகநாதன்,ரவி,டி.எஸ்.குருவப்பா,ஜெயக்குமார்,நிலவழகன், தமிழழகன்,சுல்தான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
தம்பிநாயுடுபாளையத்தில் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் - ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி வழங்கினார்.
Image
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதுவாயல் கிராமத்தில் கபசுர குடிநீர்
Image