தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் தலா ரூ.325 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய உள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே 6 மருத்துவக் கல்லுரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய 3 மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்தால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயரும். 
மேலும் படிக்க.. தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: ஒப்புதல் கடிதத்தை அனுப்பியது மத்திய அரசு
ஏற்கனவே தமிழகத்தில் 24 மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் கட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில், மேலும் 3 கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 150 எம்பிபிஎஸ் இடங்கள்  உருவாக்கப்படும். இதன் மூலம் 450 இடங்கள் தமிழக அரசுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் கூடுதலாகக் கிடைக்க உள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டொன்றுக்கு எம்பிபிஎஸ் இடங்கள் 4,600 ஆக உயரும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒரே நேரத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் 3 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க பிரதமர் மோடியிடம் நான் கோரிக்கை வைத்து, அதற்கான முன்மொழிவுகள் தமிழ்நாடு அரசால் குறுகிய காலத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
மேற்படி மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க தேவையான நிலம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எனது கோரிக்கையினை ஏற்று கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த மாதம் தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் 6 அரசு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதோடு மட்டுமல்லாமல், தற்போது கூடுதலாக 3 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். இதற்கென 2,925 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் 1,755 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. 
தமிழ்நாடு அரசின் பங்காக 1,170 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
தம்பிநாயுடுபாளையத்தில் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் - ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி வழங்கினார்.
Image
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.