மகாராஷ்டிர சட்டப்பேரவையில் வரும் 30ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

மும்பை 

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் வரும் 30ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாஜக - அஜித்பவார் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சாதகங்கள் குறித்து பார்க்கலாம்.
பாஜகவின் 105 எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய சமாஜ் பக் ஷாவின் ஒரு எம்.எல்.ஏ என ஏற்கனவே பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்களின் ஆதரவு  உள்ளது. அஜித்பவாருக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படும் 24 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆதரவளித்தாலும் பாஜக அரசுக்கு 130 எம்.எல்.ஏக்களின் பலம் மட்டுமே இருக்கும்.
ஆனால் 288 எம்.எல்.ஏக்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பதால், பாஜக - அஜித்பவார் கூட்டணிக்கு மேலும் 15 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. பெரிய கட்சிகளை தவிர்த்து மீதமுள்ள 29 எம்.எல்.ஏக்களில், தலா 2 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் விகாஸ் ஆகாதி ஆகியவையுடன், தலா ஒரு உறுப்பினர்களை கொண்டிருக்கும் மேலும் 2 சிறிய கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. அதனால் அந்த 6 உறுப்பினர்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பது சந்தேகமே.
அது தவிர பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் ஆகாதி, மகாராஷ்டிர நவநிர்மான் உள்ளிட்ட சிறிய கட்சிகளின் 9 எம்.எல்.ஏக்கள் மற்றும் 13 சுயேட்சைகள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 22 பேர் ஆதரவளித்தால் பாஜக - அஜித்பவார் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க போதுமானதாக இருக்கும்.

Popular posts
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
தம்பிநாயுடுபாளையத்தில் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் - ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி வழங்கினார்.
Image